தொடர் தோல்விகளை சந்திக்கும் பிரபாஸ்.. ரிலீசுக்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களால் சரியும் மார்க்கெட்

தெலுங்கு திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பேமஸ் ஆனார். ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த திரைப்படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது.

இப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களை இன்னும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பிரபாஸ் அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.

அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாகோ என்ற திரைப்படம் வெளியானது. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

Also Read : பிக்பாஸ் மூலம் கிடைத்த ஜாக்பாட்.. சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

அதைத்தொடர்ந்து பிரபாஸ் ராதே ஷியாம் என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

350 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கடும் நஷ்டத்தை சந்தித்தார். மேலும் தொடர்ச்சியாக பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரபாஸ் பற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பியது.

இனிமேலாவது அவர் பிரம்மாண்டத்தை மட்டும் நம்பாமல் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பிரபாஸ் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மீண்டும் பிரம்மாண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார்.

Also Read : இருக்க கொஞ்சநஞ்ச பெயரையும் கெடுத்து விடாதீர்கள்.. பயத்தில் கட்டளை போட்ட பாகுபலி பிரபாஸ்

அந்த வகையில் இவர் அடுத்ததாக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ராமாயண காவியத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு அனிமேஷன் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் டீசரில் காட்டப்பட்ட பல காட்சிகளும் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இதனால் இந்த படம் நிச்சயம் தோல்வியடையும் என்று இப்போதே பேசப்பட்டு வருகிறது. இதற்கு பிறகும் கூட பிரபாஸ் இதே போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் அவருடைய மார்க்கெட் காலியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Also Read : 50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்.. வேண்டாம் என மறுத்த பிரபலம்