திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ராமர் மார்க்கெட்டையே காலி செய்த பிரபாஸ்.. ஒட்டுமொத்தமாக கதறவிட்ட ஆதிபுருஷ்

Adipurush: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் தான் ஆதிபுருஷ். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கடும் விமர்சனங்களை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது.

அதிலும் தியேட்டரில் அனுமாருக்கு ஒரு சீட்டு, ராமர் கோவிலுக்கு 101 இலவச டிக்கெட் என பட குழு விளம்பரம் செய்ததை பார்த்து ஊர் உலகமே வயிற்றைப் பிடித்துக் கொண்டு உருண்டு பிரண்டு சிரித்தது. இப்படி க்ரிஞ்சாக மாறி இருந்த இப்படம் நேற்று வெளியான சில நிமிடங்களிலேயே நெகட்டிவ் விமர்சனத்திற்கு ஆளாகியது.

Also read: Adipurush Movie Story Review- இதைத்தான் இத்தனை நாளா உருட்டிகிட்டு இருந்தீங்களா.? ஆதி புருஷ்ஷா இல்ல பீதி புருஷ்ஷா.. முழு விமர்சனம்

அதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தற்போது மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் பல சினிமா விமர்சகர்கள் இப்படம் குறித்த தங்களுடைய விமர்சனத்தை முன் வைத்திருப்பது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் இப்படம் கதற விட்டிருக்கிறது.

அந்த வகையில் ஏற்கனவே தெருக்கூத்து, சீரியல், கதை ஆகியவற்றில் கேட்ட இந்த ராமாயணத்தை மீண்டும் படமாக எடுத்து நம்மை சோதித்து இருக்கிறார் இயக்குனர். மேலும் குறிப்பிட்டு சொல்லும் படியாக எந்த நல்ல விஷயமும் படத்தில் இல்லை. அதிலும் ஒரு காட்சியையே நீட்டி முழக்கி இரண்டாம் பாதியாக கொடுத்திருப்பது சோதனையின் உச்சகட்டம்.

Also read: பிரபாஸின் தல தப்பியதா.? ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

விசுவல் காட்சிகளும் இருட்டுக்குள்ளே இருப்பது தன் தப்பை மறைப்பதற்காக படக்குழு செய்த புத்திசாலித்தனமான முயற்சி தான். இதன் மூலம் அவர்கள் சலிச்சுப் போன ராமாயண கதையையே இனிமேல் யாரும் எடுக்க முடியாதபடி காலி செய்து இருக்கின்றனர். அது மட்டுமின்றி பிரபாஸ், ராமர் மார்க்கெட்டையே ஊத்தி மூடி இருக்கிறார் என்று ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்

அதிலும் கௌரவம் கௌரவம் என்று சொல்லி என் கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டீங்களேடா என ராமரே கதறும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். டீசரை பார்த்து ஊரே கைகொட்டி சிரிச்சப்பவே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டாமா, இப்படி ஒரு படத்தை எடுத்து பொன்னியின் செல்வனே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வெச்சிட்டீங்களே என சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

Also read: மொத்தமாய் தலையில் துண்டை போட்ட பிரபாஸ், திடீர் விசிட் அடித்த அனுமன்.. ஆதிபுருஷ் அட்ராசிட்டிஸ்

Trending News