வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அனுஷ்காவுக்கு டாட்டா.. பிரபாஸை திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து தற்போது உலக சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு பாகுபலி படங்களின் மூலம் புகழ் பெற்றவர்தான் நடிகர் பிரபாஸ்.

சமீபகாலமாக பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களுமே இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் பிரபாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

அந்தவகையில் அடுத்ததாக ராதே ஷ்யாம், ஆதி புரூஸ், சலார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இந்த மூன்று படங்களுமே 300 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் தான் உருவாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க பிரபாஸ் நீண்ட காலமாக பிரபல நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் நண்பர்கள் தான் எனவும் இருவருக்குள்ளும் எதுவுமில்லை எனவும் வழக்கம்போல் கூறும் நடிகர் நடிகைகள் பதிலையே கூறி இருவருமே காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

prabhas-anushka-cinemapettai-01
prabhas-anushka-cinemapettai-01

ஆனால் இடையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என பிரபாஸ் தற்போது தனக்கான பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டாராம். ஐடி கம்பெனி நடத்தும் தொழிலதிபரின் மகளை விரைவில் திருமணம் செய்ய உள்ளாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்கள் டோலிவுட் வாசிகள்.

Trending News