பொன்னியின் செல்வனால் ஆதிபுருஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. மொத்த சீட்டுமே அனுமாருக்கு தானா?

Movie Adipurush: பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் தொடக்கத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

அதாவது இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமாருக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்தனர். இது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. அடுத்ததாக இப்படத்தின் ப்ரோமோஷன் திருப்பதியில் நடைபெற்றது. இதனால் படக்குழு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்றனர்.

Also Read : ஆதிபுருஷ் விமர்சனம் கிளப்பிய பீதி.. 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையா?

அப்போது கோயிலின் தேவஸ்தானத்திற்குள் ஆதிபுருஷ் படத்தின் ஹீரோயினுக்கு இயக்குனர் முத்தம் கொடுத்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத்தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை ஆதிபிருஷ் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தால் இப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதாவது கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் படமாக எடுத்திருந்தார். இது தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்த சோழர்களைப் பற்றிய கதைதான். ஆகையால் தமிழர்களின் பெருமையை போற்றும் படமாக பொன்னியின் செல்வன் இருந்ததால் மற்ற மொழிகளில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை.

Also Read : சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா.? முதல்ல அனுமார், இப்ப ராமர்.. ஆதிபுருஷ் தல தப்புமா!

இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு மற்ற மொழியில் பெரிய அளவில் வசூல் இல்லை. ஆனால் மற்ற மொழி படங்கள் தமிழ் சினிமாவில் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல் தான் பாகுபலி படமும் இங்கு நல்ல வசூலை பெற்றிருந்தது. இப்போது சுதாகரித்துக் கொண்ட தமிழ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்திற்கு டிக்கெட் வாங்க முன் வரவில்லையாம்.

டிக்கெட் புக்கிங் தொடங்கி பல மணி நேரங்களான பின்பும் இன்னும் டிக்கெட்டுகள் விற்ற பாடு இல்லையாம். இதனால் தியேட்டர் ஓனர் கலக்கத்தில் இருக்கிறார்களாம். ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் எல்லா சீட்டுகளும் அனுமாருக்கு தானா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்