புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Adipurush Movie Story Review- இதைத்தான் இத்தனை நாளா உருட்டிகிட்டு இருந்தீங்களா.? ஆதி புருஷ்ஷா இல்ல பீதி புருஷ்ஷா.. முழு விமர்சனம்

Adipurush: புராண காவியமான இராமாயணத்தை நாம் கதை வழியாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் சின்னத்திரை தொடராக கூட இது வெளிவந்திருக்கிறது. அப்படி இருக்கும் இந்த சூழலில் இந்த காவியத்தை மையப்படுத்தி உருவான ஆதிபுருஷ் இன்று வெளியாகி இருக்கிறது. பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.

14 ஆண்டு வனவாசம் செல்லும் ராமருடன் அவர் மனைவி சீதையும், தம்பி லட்சுமணனும் செல்கிறார்கள். அங்கு சீதையின் மேல் ஆசைப்பட்டு அவரை கவர்ந்து செல்கிறார் ராவணன். தன் மனைவியை மீட்க அனுமனின் துணையோடு களம் இறங்கும் ராமர் ராவணனை எப்படி வதம் செய்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

Also read: பிரபாஸின் தல தப்பியதா.? ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பலருக்கும் தெரிந்த கதை தான் என்றாலும் புதுமையாக கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். ஆனால் படத்தை பார்க்கும் போது இதையா இவ்வளவு நாளு உருட்டிகிட்டு இருந்தீங்க என்றுதான் கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு விஷுவல் காட்சிகள் மனதில் பதியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

500 கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்காக இயக்குனர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து இருக்கலாம். ஆனால் மொத்த படத்திலும் ஆறுதலான ஒரு விஷயம் என்றால் அது பிரபாஸின் நடிப்பு தான். சில இடங்களில் பாகுபலி சாயல் தென்பட்டாலும் ராமராக அவர் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். சீதையாக வரும் கீர்த்தி சனோன் அழகாகவும், ராவணனால் சிறைப்பட்ட பிறகு சோகமே உருவாகவும் வந்து செல்கிறார்.

Also read: மொத்தமாய் தலையில் துண்டை போட்ட பிரபாஸ், திடீர் விசிட் அடித்த அனுமன்.. ஆதிபுருஷ் அட்ராசிட்டிஸ்

மேலும் ராவணனாக வரும் சைப் அலிகானின் தோற்றமும், நடிப்பும் பெரும் குறையாக இருக்கிறது. அதிலும் இலங்கையில் இருக்கும் பெண்கள் நவநாகரிக மங்கைகள் போல் இருப்பது கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அப்படி பார்த்தால் இந்த ராமாயண காவியம் நவயுகத்திற்கு ஏற்ற மாடர்ன் கதையாக தான் தெரிகிறது. இதுதான் மிகப்பெரிய சறுக்கலாகவும் இருக்கிறது.

ஏற்கனவே இப்படம் கலாய்க்கப்பட்டு வந்தாலும் முழு படத்தையும் காணும் ஆவல் அனைவருக்கும் இருந்தது. ஆனால் அந்த ஆர்வம் இப்போது ஏமாற்றமாக மாறி இருக்கிறது. மேலும் சண்டை காட்சிகள் மற்றும் ஒரு சில இடங்களில் பாராட்டுகளைப் பெற்றாலும் மொத்த படமாக பார்க்கும் போது சுமார் ரகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆதிபுருஷ்- பீதிபுருஷ்

சினிமா பேட்டை ரேட்டிங்: 2/5

Trending News