புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சந்திரமுகி படத்தில் இந்த காட்சியில் நடிக்க மறுத்த பிரபு.. அசால்டாக செய்து முடித்த நாசர்

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு மேல் பல படங்கள் ஓடியுள்ளன. ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய படம் சந்திரமுகி. இப்படம் வெளிவந்த காலத்தில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

அதுவும் ரஜினிகாந்த், பிரபு நடிப்பில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்திரமுகி படத்தில் வாசு ரஜினிகாந்தை வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சியை முதலில் பிரபுவிடம் நடிக்க சொல்லியுள்ளார்.

அதாவது ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருப்பார் பிரபு ஆனால் அவரது மனைவியான ஜோதிகா மீது ரஜினிகாந்த் சந்தேகப்பட்டு இதனை பிரபுவிடம் கூற கோபமடைந்த பிரபுதான் ரஜினிகாந்தை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முதலில் வாசு கதை எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட பிரபு அதன் பிறகு என்னால் இந்த காட்சியில் நடிக்க முடியாது வேற யாராவது நடிக்க சொல்லுங்கள் என கூறிவிட்டார். பின்பு வாசு விஜயகுமார் அவர்களிடம் இந்த காட்சி நடிக்க சொன்னார். ஆனால் அவரும் மறுக்க பின்பு நாசர் இந்த காட்சி நடிக்கிறேன் என கூறி ரஜினிகாந்தை வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சியில் நடித்தார்.

படத்தில் அதிகம் பேசப்பட்ட காட்சி என்றால் அது ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியேறுவது தான். இந்த காட்சியில் நடிப்பதற்கு முதலில் இரண்டு நடிகர்களும் மறுப்பு தெரிவிக்க. ஆனால் நான் இதனை தைரியமாக செய்து முடித்தேன் என நாசர் வெளிப்படையாகக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்பதால் அனைவரும் இந்த காட்சி நடிக்க மறுத்த காரணம் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டுவார்கள் என்பதற்காக ஆனால் அதையெல்லாம் நான் கண்டு கொள்ளாமல் இந்த காட்சி நடித்தேன் என கூறியுள்ளார்.

Trending News