திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரபுதேவா தாடிக்கு நயன்தாரா காரணம் இல்லையாம்.. வெளிப்படையாக அவரே சொன்ன 2 காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் பல இயக்குனர்களும் பிரபுதேவாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

பிரபுதேவா சினிமாவில் நடன இயக்குனராக முதலில் அறிமுகமானார். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். அதன்பிறகு இயக்குனராக கால்பதித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் , ஜெயம் ரவி மற்றும் விஷால் உட்பட பல நடிகர்களை வைத்து ஹிட் படங்களையும் கொடுத்தார்.

தமிழ் தாண்டி மற்ற மொழி நடிகர்கள் வைத்து வெற்றி கொடுத்தால் அதன் மூலம் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் பிரபுதேவா இடம் பிடித்தார். அதற்கு காரணம் மற்ற மொழி நடிகர்கள் வைத்தும் பல மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்ததுதான். சமீபத்தில் கூட ஹிந்தியில் சல்மான்கான் வைத்து ராதே எனும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

prabhu deva
prabhu deva

பிரபுதேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவருடைய பலூன் பேகி பேண்ட் இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதால் இந்த பேண்டின் மீது ஆர்வம் வந்ததாகவும் அதன் மட்டுமில்லாமல் நடனமாடும் போது இது சவுகரியமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த பேண்ட்டை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். ஒருமுறை ரஜினி சார் கூட இந்த பேண்ட் கேட்டதாக வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் நீங்கள் பல வருடமாக தாடி வைத்திருக்கிறீர்கள் அதற்கு என்ன காரணம் என கேட்டனர். அதற்கு நான் சிறு வயதிலேயே நடன இயக்குனராக அறிமுகமாகி விட்டேன். அதனால் தன்னை வயதானவராக காட்டிக் கொள்வதற்கு தாடி வைத்திருப்பதாகவும், மேலும் இவருடைய தந்தையின் தாடி வைத்திருப்பதைப் பார்த்து தனக்கும் தாடி வைத்திருப்பது பிடித்ததாகவும் கூறினார்.

தற்போது பிரபுதேவா ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவாவின் இந்த தாடி ரகசியத்தை அறிந்தபின் அப்ப நயன்தாரா காரணம் இல்லையா என்பதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News