தமிழில் நடன இயக்குனர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவும் மாஸ்டர் என்கிற லெவலில் இருப்பவர் நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா பிரபல தமிழ் தொலைக்காட்சி “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சியே நடத்தி அதற்கு நடுவராக பிரபுதேவாவையே அமர வைத்தது.
இப்படியாக உடலை வில்லாக வளைத்து ஆடும் நாயகரின் ஆடலுக்கு எத்தனையோ மகுடங்கள். இயக்குனராய் இந்தி வரை சென்று இமயம் தொட்ட இயக்குனர் சில மகத்தான வெற்றிகளை பார்போற்ற வைத்துள்ளார்.
அப்படியான சில வெற்றிகள் நூ ஒஸ்தானா நேனுண்டானு தெலுங்கு வெர்சனில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்த படத்தின் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம்.

போக்கிரி – இளைய தளபதி விஜய், அசின் கூட்டணியில் வந்த படம் இந்த திரைப்படம் அன்றைய பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் பட்டையை கிளப்பியது.
எங்கேயும் காதல் – ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வாணி கூட்டணயில் படம் பெறும் வரவேற்பை பெற்றது. பாரின் லொக்கேசன் மாடல் அழகிகள் என ஒரு மிரட்டு மிரட்டி இருப்பார் இயக்குனர் பிரபு தேவா.
ரவுடி ரத்தோர் – அக்சய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வருவேற்பை பெற்றதோடு நல்ல விமர்சனமும் பெற்றது.
வான்டட் – தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட போக்கிரி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இந்தி சினிமாவில் பெரும் வசூலை எட்டியது இப்படம் சும்மாவா நடித்தது வசூல் மன்னன் சல்மான் கானாச்சே.