இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என பலராலும் அறியப்படுபவர் பிரபுதேவா. அவ்வாறு இவருடைய நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிரபுதேவா போல நடன இயக்குனராக வரவேண்டும் என பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடிகர் மற்றும் இயக்குனராகவும் பிரபுதேவா பணியாற்றி உள்ளார்.
பிரபுதேவா தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சல்மான் கான், சோஹல் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ராதே படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார்.
இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்த சல்மான்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார் இப்படம் 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி மொத்த வசூல் 20 கோடி தான். கிட்டத்தட்ட நூறு கோடி நஷ்டத்தை இப்படம் சந்தித்தது.
மேலும் இப்படத்தை எடுப்பதற்குள் பிரபுதேவா படாதபாடு பட்டுவிட்டாராம். படமும் நஷ்டத்தை சந்தித்ததால் இனிமேல் டைரக்ஷன் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கிட்டதட்ட ஒன்பது படங்களில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வருகிறாராம். பீட்டர் ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் லக்கிமேன், ஊமை விழிகள், பஹீரா, ஃபிளாஷ்பேக், காதலன் ரிட்டன்ஸ, யங் மங் சங் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் முசாசி என்ற படத்தில் பிரபுதேவா ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
மேலும் வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்திலும் பிரபுதேவா நடிக்கவுள்ளார். இதனால் பிரபுதேவாவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. மேலும் டைரக்சனல் விட்டதை ஹீரோவாக பிரபுதேவா தக்கவைத்துக் கொள்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.