Prabhu Deva: போட்டி நிறைந்த திரை உலகில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் விடாமுயற்சியுடன் ஜெயித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் தன்னை மிதித்துக் கொண்டு ஆயிரம் பேர் வருவதற்கு தயாராக இருப்பார்கள். இப்படித்தான் பிரபுதேவாவின் நிலைமையும் ஆகிவிட்டது.
அதாவது ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக சினிமாவிற்குள் நுழைந்த பிரபுதேவா நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் நடிகராகவும் களமிறங்கினார். அப்படி அவர் நடித்த படங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றநிலையில் டான்ஸ் மாஸ்டராகவும், நடிகராகவும் பயணித்து வந்தார்.
போகப் போக சில படங்களை இயக்கி தயாரிப்பிலும் கவனம் செலுத்தினர். அதன் பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் முழு நேரமும் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இப்போ இருக்கிற காலத்திற்கு ஏற்ப படங்களையும் சரி, நடிப்பையும் சரி சரியாக பிரபு தேவாவால் கொடுக்க முடியவில்லை.
ஆனாலும் விடாமுயற்சியுடன் வருஷத்துக்கு மூன்று படங்களை நடித்து கொடுத்தார். கடைசியில் அது எதுவுமே பிரயோஜனம் இல்லாமல் எல்லாமே வந்த சுவடு தெரியாமல் பெய்லியர் ஆகிவிட்டது. இதனால் துவண்டு போன பிரபுதேவா தற்போது பழைய பாணிக்கு திரும்பிவிடலாம் என படங்களை இயக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்.
கச்சிதமாக பிளான் போட்ட பிரபுதேவா
ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் இயக்குனராக வெற்றி பெற்று இருக்கிறார். அதிலும் விஜய்யை வைத்து போக்கிரி மற்றும் வில்லு போன்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார். அதே மாதிரி பாலிவுட்டிலும் சல்மான்கான் வைத்து தபாங் 3 மற்றும் ராதே படங்களையும் எடுத்தார்.
அந்த வகையில் மறுபடியும் இவர்களை வைத்து இயக்குனராக வெற்றி பெற்று விடலாம் என்று இங்கே விஜய் இடமும், அங்கே சல்மான் கானிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் விஜய் இப்போது அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவதால் பிரபு தேவாவிடம் எந்தவிதப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்.
ஆனால் சல்மான் கான், பிரபுதேவா கேட்ட உடனே ஓகே என்று அவருடைய சம்மதத்தை தெரிவித்துவிட்டார். அந்த வகையில் கூடிய விரைவில் இவர்களுடைய காம்போவில் இன்னொரு படம் உருவாகப் போகிறது. இதன் மூலம் பிரபுதேவா விட்ட மார்க்கெட்டை பிடித்து விட்டால் இவருடைய கேரியருக்கு ஒரு கம்பேக் கிடைத்துவிடும்.