திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அடுத்தடுத்து புதிய படங்கள்.. பிரபுதேவா காட்டில் அடைமழை தான்!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழில் படங்களை இயக்குவதை விட நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் நடிப்பில், யங் மங் சங், பொன்மாணிக்கவேல், பஹீரா போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.
இதில் பொன்மாணிக்கவேல் படம் மட்டும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டதற்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபுதேவா அடுத்தடுத்து நான்கு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை என்பவர் தயாரிக்கிறார். அதன்படி மகாபலிபுரம், கொரில்லா ஆகிய படங்களை இயக்கிய டான் சாண்டி இயக்கத்தில் பிளாஷ்பேக் என்கிற படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார்.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து மஞ்சப்பை படம் மூலம் கவனம் ஈர்த்த ராகவன் இயக்கும் மை டியர் பூதம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதுதவிர ஏற்கனவே குலேபகாவலி படத்தில் பணியாற்றிய கல்யாண் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். மேலும், அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார்.

prabhudeva-cinemapettai
prabhudeva-cinemapettai

Trending News