திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

யோவ், அந்த படம் நடிச்சி 2 வருஷம் ஆச்சு, எப்பதான் ரிலீஸ் பண்ணுவீங்க.. கடுப்பான பிரபுதேவா

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கிய பிரபுதேவா அதன் பிறகு தன்னுடைய இயக்குனர் திறமையை வெளிக்காட்டி சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வருகிறார். அதிலும் பாலிவுட்டில் பிரபுதேவா தான் முன்னணி நடிகர்களில் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார்.

இயக்குனராக பிஸியாக இருந்தவரை மீண்டும் நடிகராக தமிழ் சினிமாவுக்கு இழுத்து வந்தார் இயக்குனர் ஏ எல் விஜய். நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபுதேவா நடித்த தேவி திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரத் தொடங்கிய பிரபுதேவா ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்கள் நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன.

அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடித்த திரைப்படம்தான் பொன் மாணிக்கவேல். முதல் முறையாக பிரபுதேவா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்.

இந்த படத்தின் டிரைலர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தற்போது வரை அந்த படம் வெளியாகாமல் தடுமாறி வருகிறது.

இதுகுறித்த பிரபுதேவா சமீபத்தில் தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. தியேட்டர் ரிலீஸ் தான் செய்ய முடியவில்லை, இப்போது ஓடிடி நன்றாக இருக்கும் போதும் ரிலீஸ் செய்யவில்லை என்றால் எப்படி? என கோபப்பட்டு திட்டிவிட்டாராம்.

Trending News