வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரபு- குஷ்புவுக்கும் திருமணமே ஆகிவிட்டது.. பேட்டியில் மொத்தத்தையும் போட்டுடைத்த பிரபலம்

Prabhu- Khushboo controversy: குஷ்புவும் பிரபுவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என பிரபலம் ஒருவர் தற்போது அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஷ்பூ- பிரபு என சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சின்ன தம்பி படம்தான். இந்தப் படத்திற்குப் பிறகு எவர்கிரீன் ஜோடியாக இருந்த இவர்கள், காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது.

90களில் கொடி கட்டி பறந்த குஷ்புவின் மீது உள்ள அன்பால் அந்த காலத்திலேயே அவருக்கு கோயில் கட்டி பெருமைப்படுத்தினர். அந்த சமயத்தில் தான் குஷ்புவுக்கும் பிரபுவுக்கும் திருமணம் நடந்து விட்டது என்ற சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த விஷயத்தை பற்றி பிரபல யூடியூப் சேனலில் டாக்டர் கந்தராஜ் மொத்த விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். பிரபு- குஷ்பூ காதல் விவகாரம் வெடித்த சமயத்தில் அந்த செய்தி தலைப்பு செய்தியாகவே வந்தது. அப்போது ஒரு பத்திரிக்கையாளர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று போடாமல், குஷ்புவும் பிரபுவும் கல்யாணம் செய்து விட்டார்கள் என்று போட்டுவிட்டார்கள்.

Also Read: ஹீரோக்களை கலாய்த்தே கைத்தட்டல் வாங்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. சரத்குமாரை டேமேஜ் செய்த நக்கல் மன்னன்

குஷ்பு- பிரபுவும் ரகசிய திருமணம்

இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. அத்துடன் குஷ்பூ- பிரபு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் எல்லா செய்திகளிலும் வைரலானது. அந்த நேரத்தில் பிரபுவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகள் இருந்தது. இவர்கள் திருமணம் செய்து கொண்டால் பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினரிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பும் என்பதாலே, இவர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

அதுவே இவர்களது காதல் முறிவிக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் குஷ்பூ- பிரபு திருமணம் செய்து விட்டதாக வந்த செய்தி கூட, அவர்கள் இருவரும் சொல்லி தான் பத்திரிக்கையில் போடப்பட்டதாக எல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். இந்த விஷயம் எல்லாம் தற்போது டாக்டர் கந்தராஜ் மூலம் வெளிவந்துள்ளது.

இப்போது குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், தேவை இல்லாமல் புது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ நிச்சயம் இந்த விஷயத்திற்கு பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: 3 பெயர் மாற்றியும் காணாமல் போன கொழுக் மொழுக் நாயகி.. கிளாமரை நம்பி களமிறங்கிய குஷ்பூ ஜெராக்ஸ்

Trending News