தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகர்களாக இருந்தவர்கள் பிரபு மற்றும் குஷ்பு. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படங்களைப் பற்றி பார்ப்போம்.
பிரபு குஷ்பு நடித்த (10) பத்து படங்கள்
#1. தர்மத்தின் தலைவன்
ரஜினி, பிரபு இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியும், பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு நடித்தனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கும், இசை இளையராஜா. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
#2. மை டியர் மார்த்தாண்டன்
பிரபு, குஷ்பூ இரண்டாவதாக ஜோடி சேர்ந்த படம். இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி மிக அற்புதமாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் ஹிட் இசை இளையராஜா. படம் சுமாராக ஓடியது.
#3. சின்னத்தம்பி
வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்த படம் சினனத்தம்பி. இந்த படத்தில் கவுண்டமணி காமெடி நன்றாக இருக்கும். இந்த படத்தின் இசை இளையராஜா அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. பிரபு படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் இதுதான்.
#4. கிழக்குக்கரை
சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்குப் பின்னர் திரும்பவும் வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்த படம் இந்தப் படத்திலும் கவுண்டமணி நடித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.
#5. பாண்டித்துரை
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த அடுத்த படம் பாண்டித்துரை. இந்த படத்தை மனோஜ் குமார் இயக்கியிருந்தார். கவுண்டமணி, ராதாரவி, சில்க் ஸ்மிதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
#6. நாளைய செய்தி
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த திரைப்படம் நாளை செய்தி. கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர், இசை ஆதித்யன் படம் சுமாராக ஓடியது.
#7. மறவன்
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த மறவன் படத்தில் கவுண்டமணி, நெப்போலியன் நடித்திருந்தார்கள். இசை தேவா படம் தோல்வி.
#8. உத்தமராசா
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த அடுத்த படம் உத்தம ராசா. இந்த படத்திற்கு இசை இளையராஜா. கவுண்டமணி ,செந்தில் காமெடி படம் சற்று ஓடியது.
#9. தர்மசீலன்
பிரபு இரண்டு வேடங்களில் நடித்த படம் ஜோடியாக குஷ்பு நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்வியைத் தழுவியது.
#10. சின்ன வாத்தியார்
பிரபு இரண்டு வேடங்களில் நடித்தார். ஜோடியாக ரஞ்சிதா, குஷ்பூ நடித்திருந்தனர். கூடுவிட்டு கூடு பாய்வது கதையாக கொண்டிருந்த படம் மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது.
(போலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள் )