சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பிரபுவின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு.. அன்னை இல்லம், சாந்தி தியேட்டர் என குவித்த சிவாஜி

Prabhu salary and net worth: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இளைய திலகம் பிரபு சங்கிலி தொடங்கி பொன்னியின் செல்வன் வரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். வயதானாலும் மார்க்கெட் குறையாத நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

தமிழைத் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். தன் சக நடிகர்களையும் அண்ணன்,தம்பி என அன்புடன் பழகும் இயல்புடைய பிரபு, தயாரிப்பாளர், பட விநியோகஸ்தர் என்ன பன்முகத் திறமைகளை  ஒருங்கே  கொண்டுள்ளார்.

Also Read: 5 பெரிய ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்த பி வாசு.. அப்பாவியான பிரபுவுக்கு 365 நாட்கள் ஓடிய படம்

சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பல வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறார். தமிழ் சினிமா துறையில் அதிக வருமான வரி கட்டுபவராக உள்ள பிரபு தற்போது சென்னையில் பாரம்பரியமாக உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தவிர கோயமுத்தூர், ஈரோடு, டெல்லி என பல இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். நகைக்கடையின் விளம்பர மாடலாகவும் அம்பாசிடராகவும் உள்ளார்.

பல சொகுசு கார்களை வரிசை கட்டி வைத்துள்ள பிரபு, சென்னையில் கல்யாண மண்டபம்,மல்டி காம்ப்ளக்ஸ்  போன்ற பலவற்றிற்கும் சொந்தக்காரராக உள்ளார். படத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரபுவின் சொத்து மதிப்பு 500 கோடிக்கும் மேல் என அறியப்படுகிறது.

Also Read: பிரபு- குஷ்புவுக்கும் திருமணமே ஆகிவிட்டது.. பேட்டியில் மொத்தத்தையும் போட்டுடைத்த பிரபலம்

Trending News