புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நம்ம கொழுக் மொழுக் பிரபு சாரா இது? உடல் எடை குறைந்த லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகும் பலரும் அவருடைய தந்தையின் பெயரை காப்பாற்றுகிறார்களா என்றால் சந்தேகம்தான். அவற்றில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவின் மீது அக்கறை எடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிப்பு என்றால் இவர்தான் என பெயரெடுத்த சிவாஜி கணேசனின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பப்ளிமாஸ் ஹீரோவாக கலக்கியவர் நடிகர் பிரபு. ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

அதே போல் காலத்திற்கு ஏற்றவாறு மாறி முன்னணி நடிகர்களுக்கு தந்தை, குணச்சித்திர கதாபாத்திரங்கள் போன்றவற்றில் நடித்து இன்னமும் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிரபு அடுத்ததாக மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து உடல் எடையை கொஞ்சம் குறைத்துள்ளார் பிரபு.

அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. பிரபுவிடம் அனைவருக்கும் பிடித்ததே அந்த கொழுக் மொழுக் உடம்பும் கன்னக்குழி சிரிப்பு தான்.

பிரபு பொன்னியின் செல்வன் படம் மட்டுமல்லாமல் மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

prabhu-cinemapettai
prabhu-cinemapettai

Trending News