திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுந்தரம் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு.. 50 வயதில் அப்பாவான பிரபுதேவா

Prabhu Deva: நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்த பிரபுதேவா இப்போது கதாநாயகனாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு போன்ற படங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளது. இதில் முதல் ஆண் குழந்தை கடந்த 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிரபுதேவா பழகி வந்தார்.

Also Read : நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பிரபுதேவாவின் மகன்.. வெளிநாட்டில் இருந்து வெளியான புகைப்படம்

இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகளும் வெளியானது. ஆனால் ரமலத் இவர்களது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக வழக்கு தொடர்ந்தார். இது மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்க பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்து விட்டார். இந்நிலையை கடந்த சில வருடங்களாக முதுகு வலியால் பிரபுதேவா அவதிப்பட்டு வந்தார்.

இவருக்கான சிகிச்சையை பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவர் அளித்து வந்தார். இதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒன்றாக கோவிலுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாக பரவி வைரலானது. இந்த சூழலில் தற்போது பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் வம்பு பண்ணிய வடிவேல்.. சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுடன் மோதிய வைகைப்புயல்

பிரபுதேவாவின் தந்தை சுந்தரமுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள். இதில் ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இருவருக்குமே ஆண் குழந்தைகள் தான் உள்ளனர்.

பிரபுதேவாவுக்கும் முதலில் மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு முதல் பெண் வாரிசு வந்திருக்கிறது. இதனால் இப்போது சுந்தரம் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம். அதுமட்டுமின்றி பிரபுதேவா தன்னுடைய ஐம்பதாவது வயதில் மீண்டும் அப்பாவாகவும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

Also Read : முதல் படம் வெற்றிக்காக நாசுக்காக வேலை செய்த பிரபுதேவா.. சொன்னது மாதிரியே செஞ்சி காட்டிட்டாரு

Trending News