வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

29 வருடங்களுக்கு முன் பிரபு நடித்த படம்.. அதே கதையை கொண்டு நடித்து ஹிட் கொடுத்த மோகன்லால்

Prabhu and Mohanlal: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் படங்களில் உள்ள கதைகள் நன்றாக இருந்தாலும் அது கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. முக்கியமாக படங்களை பார்க்கும் பொழுது மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கனெக்ட் ஆனா மட்டுமே அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் பிரபு 29 வருடங்களுக்கு முன் நடித்த ஒரு படம் மக்களிடமிருந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

ஆனால் அந்த படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படத்தை ஆகா ஓஹோ என்று மக்கள் கொண்டாடி விட்டார்கள். அதாவது 1994 ஆம் ஆண்டு இயக்குனர் நீலகண்டா இயக்கத்தில் பிரபு, ரேவதி, ஜெயராம் நடிப்பில் பிரியங்கா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரேவதி மற்றும் ஜெயராம் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள்.

பிறகு புகுந்த வீட்டில் ஜெயராம் தம்பி செய்த ஒரு கொடூரத்தை வெட்ட வெளிச்சமாக காட்டும் விதத்தில் ரேவதி அவருடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார். இப்படத்தில் நியாயத்திற்காக போராடும் ரேவதிக்கு ஒரு சப்போர்ட்டாக நீதிமன்றத்தில் வாதாடும் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார். ஆனாலும் விமர்சன ரீதியாக சற்று பின்வாங்கியது. அப்படிப்பட்ட இக்கதையை மறுபடியும் 29 வருடங்களுக்குப் பின் எடுத்து மோகன்லால் நடித்த படம் தான் நேரு.

Also read: முதலுக்கே மோசம்.. வெங்கட் பிரபு மீது கொல காண்டில் விஜய்

கிட்டத்தட்ட ரெண்டு படங்களும் ஒரே சாயலில் தான் இருக்கும். பெருசாக எந்த ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. ஆனால் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த நேரு படம் மக்களிடம் சூப்பர் ஹிட் ஆகி அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் 12 கோடி அளவில் எடுக்கப்பட்டது. ஆனால் வசூல் அளவில் 87 கோடி அளவில் லாபத்தை சம்பாதித்து விட்டது.

அதற்கு காரணம் தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு மனநிலைமைக்கு தற்போது அனைவரும் வந்து விட்டார்கள். அதனால் தான் உடல் அளவில் ஒரு சிறுமி எந்த அளவிற்கு சித்திரவதைப்பட்டிருக்கிறார் என்பதை பார்த்ததும் அந்த நபருக்கு தண்டனை கிடைக்கும் பொழுது மக்கள் அதை எதார்த்தத்துடன் பார்த்து வருகிறார்கள். அதனால் தான் நேரு படம் வெற்றி அடைந்திருக்கிறது.

Also read: தளபதி கூட்டணியில் இணைந்துள்ள எதிர்நீச்சல் மருமகள்.. வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்

Trending News