திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எடுத்த 14 படத்தில் வெறும் நான்கு தான் வெற்றி.. தோல்வி விரக்தியில் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு

1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரபு சாலமன். அதனைத் தொடர்ந்து சீயான் விக்ரமை வைத்து கிங் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து கரணை வைத்து கொக்கி என்ற படத்தை எடுத்தார். இந்த படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான லீ படமும் ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரபுசாலமன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தான் மிகப்பெரிய உயரத்தை எட்டினார். பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய மைனா திரைப்படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான கும்கி திரைப்படம் வேற லெவல் வெற்றி பெற்றது. பிரபுசாலமன் படத்தில் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை இந்த இரண்டு படங்களும் உணர்த்தியது. அதுவே அவருக்கு ஆபத்தாக அமைந்தது.

தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களை எடுத்து குறிப்பாக காமெடி காட்சிகளில் தம்பி ராமையாவை வைத்து அவர் இயக்கிய காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியது. கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய எந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

prabusolomon-cinemapettai
prabusolomon-cinemapettai

இந்நிலையில் தற்போது கும்கி 2 படத்தை இயக்கி வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இடையில் நடிகராகவும் அறிமுகமாக உள்ளாராம் பிரபு சாலமன். அழகிய கண்ணே என்ற படத்தில் புதுமுக நடிகருடன் சேர்ந்து நடிகராகியுள்ளார் பிரபு சாலமன். இயக்குனராக சில வெற்றிகளைப் பெற்ற பிரபுசாலமன் நடிகராக முத்திரை பதிப்பாரா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

Trending News