செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிரதீப் ஆண்டனிக்கு அடிச்ச பெரிய ஜாக்பாட்.. ரசிகர்களுடன் பகிர்ந்த குட் நியூஸ்

Pradeep Antony: பிரதீப் ஆண்டனி, இந்த பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட முடியாது. கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கி இன்று வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் பிரதீப். இவர் பிக் பாஸில் டைட்டில் வென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு இருப்பாரா என்பது சந்தேகம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சில வாரத்திலேயே வெளியேறி இருந்தாலும் அந்த நிகழ்ச்சி முழுக்க ஆட்கொண்டு இருந்தது இவர்தான்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரதீப் ஆண்டனி வெளியே வந்த பிறகும் அவரை சுற்றித்தான் நடந்து கொண்டிருந்தது. பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் ஒரு பக்கம், பிரதீப்புக்கு சிவப்பு கொடி காட்டி வெளியேற்றியதற்கு காரணமாக இருந்தவர்கள் ஒரு பக்கம் என்று தான் இந்த சீசன் முழுக்க எபிசோடுகள் கடந்தது. பிரதீப் வெளியேறிய வாரம் அவருக்காக ஆதரவு குரல் கொடுத்த அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார்.

பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ரசிகர்களுடன் இரண்டற கலந்து விட்டார். தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி அவருடைய வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான விஷயம் ஒன்றைத்தான் இப்போது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

Also Read:பொண்ணு என் பேச்ச கேட்கல, எங்க வாழ்க்கையே மொத்தமா மாறிடுச்சு.. மனம் உருகி பேசிய ஐஷுவின் அப்பா

பிரதீப் சினிமாவில் உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். வாழ் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இப்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் கவின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஃபேமிலி டாஸ்கில் உள்ளே வந்து பிரதீப் கவினை ஓங்கி அறைந்ததன் மூலம் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு மீண்டும் சினிமாவில் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. அவருடைய சமீபத்திய ட்விட்டர் போஸ்டில் இந்த வருடம் படங்களில் நடித்து கொஞ்சம் சம்பாதிக்க முடிவெடுத்து இருக்கிறேன். படத்திற்கான அட்வான்ஸ் தொகையையும் வாங்கி விட்டேன். படம் கொஞ்சம் பொறுமையாக தான் வரும் எப்போது வரும் என்றெல்லாம் கேட்காதீங்க. ரிலீஸ் ஆகும் போது முடிஞ்சா தியேட்டர்ல போய் பாருங்க என சொல்லி இருக்கிறார்.

இந்த பதிவுடன் சேர்த்து ரூபாய் ஒன்பது லட்சம் காசோலையாக வாங்கியதையும் புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தன் மீது சுமத்தப்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் பிரதீப் தன்னுடைய வாழ்க்கையை முன்பை விட ரொம்ப பாசிட்டிவாக மாற்றி இருக்கிறார்.

Also Read:யூடியூப் வருமானத்தை தாண்டி வனிதா செய்யும் தொழில்.. பிக்பாஸ் வத்திக்குச்சியின் மறுபக்கம்

Trending News