Bigg Boss Season 7- Pradeep Salary: மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7ல் இருக்கும் போட்டியாளர்கள் ரொம்பவே சுயநலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் மற்ற சீசனங்களில் குரூப்பாக சேர்ந்து டீம் கேம் விளையாடுவார்கள். ஆனால் இந்த சீசனில் ‘நான் ஜெய்க்காவிட்டாலும் மற்றவர்கள் ஜெயிக்க கூடாது’ என கேவலமாக பிளே பண்ணுகின்றனர்.
அதிலும் பிரதீப்பை நேற்று ஆண்டவர் ரெட் கார்ட் கொடுத்து அதிரடியாக எலிமினேட் செய்தார். இதற்கு மொத்த பிக் பாஸ் வீடுமே சந்தோஷத்தில் கும்மாளம் போடுகின்றனர். பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கெட்ட வார்த்தை அதிகமாக பயன்படுத்தி, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை கொடுத்ததால் ரெட் கார்ட் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து விலக்கி விட்டனர். என்னதான் ரெட் கார்ட் கொடுத்தாலும் விஜய் டிவி பிரதீப்பிற்கு சம்பளமாக பல லட்சங்களை வாரி இறைத்திருக்கிறது.
Also read: போட்டியாளர்களுக்கு அல்வாவை கொடுத்த கமல்.. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பிக் பாஸ்
இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூபாய் 20,000 சம்பளமாக பெற்றிருக்கிறார். நேற்றுடன் பிரதீப் மொத்தம் 34 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தமைக்காக மொத்தமாக ரூபாய் 6,80,000 சம்பளமாக பெற்றிருக்கிறார்.
இருப்பினும் பிரதீப் டைட்டில் வின்னர் ஆகி 50 லட்சத்தை அலேக்காக அள்ளப் பார்த்தார். பிரதீப் வாயில தான் சனி. ஓவராக ஆடாமல் அடக்கி வாசித்திருந்தால் நிச்சயம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகுவதற்கு பிரதீப்பிற்கு அதிக வாய்ப்பு இருந்தது.
ஆனால் மொத்தத்தையும் கெடுத்துக் கொண்டார். இருப்பினும் சிலர் இவருக்கு ஒரே ஒரு முறை ஸ்ட்ரைட் கார்ட் கொடுத்து வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று பிக் பாஸ் ரசிகர்கள் எண்ணுகின்றனர்.