வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி… கொம்பு சீவி விட்டவராய் குத்தி கிழித்த பிரதிப் ரங்கநாதன்

Pradeep fix high salary for his next film in AGS Entertainment: இயக்குனராக கோமாளியின் மூலம் ஹிட் கொடுத்து  லவ் டுடே மூலம் டமால் டுமீல் வெற்றியுடன் நாயகனாக களம் இறங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு பணமழை கூரையை பிரித்துக் கொண்டு கொட்டுகிறது எனலாம்.

இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து படம் எடுக்கும் மற்றும் நடிக்கும் இவரது திறமைக்கு மதிப்பு அதிகம் தான் என்றாலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வரிசையாக ஹிட் கொடுத்து வான்டட் ஹீரோவாகிவிட்டார் பிரதீப். தனது சம்பளத்தையும் ஜெட் வேகத்தில் சட்டென உயர்த்தி விட்டார்.

குறைந்த செலவில் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் வசூலில் 100 கோடியை தாண்டி 20 மடங்கு லாபம் சம்பாதித்து உள்ளது இதனால் குஷி ஆகி உள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள்.  இந்த திறமையான இயக்குனரை கைக்குள்ளேயே வைத்திருக்கும் வண்ணம் பிரதீப்பிடம் அடுத்தடுத்து கதை கேட்டு வருகின்றனர்.

Also read: பிரதீப்புக்கு அடுக்கடுக்காக குவியும் வாய்ப்புகள்.. கையில் 3 படங்களை வைத்திருக்கும் ரொமான்டிக் ஹீரோ

மேலும் பிரதீப் அவர்கள் விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் எல்ஐசி என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்திற்காக இவர் வாங்கிய சம்பளமோ 15 கோடி.  இப்படத்தை தயாரிக்க இருந்த கமல், பிரதீப்பின் சம்பளத்தைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம். இதற்கு பின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இவரது சம்பளத்தை ஒப்புக்கொண்டது வேறு கதை.

விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தை அடுத்து புதிதாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்க்கு  கதை சொல்லி உள்ளாராம் பிரதீப். கதை பிடித்து போக அவரை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதுதான் நமது ஹீரோ  பிரதீப்பின் சம்பளம்.

வாழ்க்கை கொடுத்த நிறுவனம் என்பதால் தனது மார்க்கெட் ரேட்டில் அதிகமா 5 கோடி குறைத்து கொஞ்சமாக பத்து கோடி கேட்டுள்ளாராம் பிரதீப்.  கையில காசு வாயில தோசை என்று கறாராக இருக்கும் பிரதீப். 10 கோடின்னா வாங்க இல்லாட்டி போங்க என்று கெத்து காட்டி வருகிறார். பிரதீப்பை விடமுடியாமல் தவித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

Also read: சுதா கொங்கரா, சூர்யா புது பட அப்டேட்.. சூரரை போற்றை விட 2 மடங்கு சம்பவம் செய்ய ரெடி

Trending News