உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய நோய் கொரானா, இந்த நோயின் பெயரை கேட்டாலே பலரும் பயந்து போய் தான் உள்ளனர்.
கொரானா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு அந்தந்த மாநில முதல்வர்களுடன் மத்திய அரசனுடன் ஆலோசனை நடத்தி ஊரடங்கு தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கினர்.
முதலில் கூட்டம் கூடும் இடங்களான ஹோட்டல், ஜிம், விளையாட்டு மைதானம், தியேட்டர் போன்ற இடங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தனர். பின்பு தியேட்டரில் 50 % இருக்கைகளுடன் சமூக இடைவெளியை விட்டு திரையரங்குகளில் படத்தை திரையிடலாம் என மாநில அரசு தெரிவித்தது.
ஆனால் நேற்று தமிழக முதல்வர் தியேட்டரில் 100 % இருக்கைகளுடன் ரசிகர்கள் படத்தை திரையில் பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். இந்த தகவலை அறிந்த மத்திய சுகாதாரத் துறை பொது நிபுணர் பிரதீப் கவுர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா மிக வேகமாக பரவும்.
இதுபோன்ற இடங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை விட்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்துள்ள குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் 100% தியேட்டர்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அக்கறையுடன் பதிவிட்டுள்ளார். இதனால் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் இல்லை என்றால் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.