திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆனா உதயநிதி!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் லவ் டுடே. புதுமுக இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பல்வேறு ஊடகங்களுக்கு பிரதீப் ரங்கநாதன் பேட்டி கொடுத்த வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதிலும் பெரும்பாலும் இயக்குனர்கள் இடம் பெற்றிருந்தனர்.

Also Read : லவ் டுடே ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சூர்யாவின் மாமா.. அடுத்தடுத்து பிசியாகும் பிரதீப்

சுந்தர் சி, மிஸ்கின், அருண்ராஜா காமராஜ் போன்ற இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தற்போது பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கூட இந்த விழாவில் பங்கு பெற்றார். இதைத்தொடர்ந்து மேடையில் எல்லா பிரபலங்களுமே பேசினர். ஆனால் இவர்களுக்கு கிடைத்ததை விட பல மடங்கு பிரதீப் ரங்கநாதன் பேசும்போது கைதட்டல் கிடைத்தது.

மேலும் டாப் நடிகர்களான விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு கிடைப்பது போல கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ரசிகர்கள் கைதட்டளை ஓயாமல் தட்டிக் கொண்டிருந்தனர். இவ்வாறு லவ் டுடே என்ற ஒரு படத்தால் ஓவர் நைட்டில் இவர் பிரபலமாகியுள்ளார். அதன் பின்பு பிரதீப் ரங்கநாதன் கையெடுத்து கும்பிட்டு அனைவரையும் அமைதி ஆகும்படி செய்தார்.

Also Read : காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

இவ்வாறு ஒரு புதுமுக இயக்குனருக்கு இவ்வளவு வரவேற்பை பார்த்து மேடையில் உள்ள மற்ற இயக்குனர்களின் முகத்தில் பெரும் இறுக்கம் காணப்பட்டது. மேலும் இவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என அனைவருக்கும் பெரும் வயித்தெரிச்சல் ஏற்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி இது உதயநிதி படத்திற்கான விழாவா அல்லது பிரதீப் ரங்கநாதன் படத்திற்கான விழாவா என்று குழப்பம் ஏற்படுத்தும் அளவிற்கு இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பிரதீப் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் அவர் சினிமாவில் பல உயரங்களை அடைய வாய்ப்புள்ளது.

Also Read : பிளாக் ஷீப் போல சினிமாவில் கால்பதிக்கும் பிரபல யூடியூபர்.. லவ் டுடே பிரதீப்புக்கு இவர் தான் போட்டியா?

Trending News