வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்னேஷ் சிவன் தலையில் குண்டை போட்ட லலித்.. தல தப்பியதுன்னு ஓட்டம் பிடித்த பிரதீப் ரங்கநாதன்

விக்னேஷ் சிவன் இயக்கும் படம் LIK. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தான் இதன் விரிவாக்கம். படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

படத்தில் எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, மிஷ்கின் சீமான், ஆனந்தராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்பொழுது இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இந்த படம் ஃபர்ஸ்ட் காப்பியில் விக்னேஷ் சிவன் இயக்கி லலித்திடம் கொடுப்பதாகத்தான் அக்ரீமெண்ட். ஆரம்பத்தில் இந்த படம் கமிட்டாகும் போது டிஜிட்டல், சேட்டிலைட் நிறுவனங்கள் பெரிய லெவலில் இருந்தது அதனால் இந்த படம் நல்ல பிசினஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது உள்ள நிலவரப்படி டிஜிட்டல், சேட்டிலைட் நிறுவனங்கள் அனைத்தும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. அதனால் இந்த சமயத்தில் இந்த படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியாது என லலித் யோசித்து இதன் பட்ஜெட்டை குறைக்குமாறு விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். பணம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார்.

பட்ஜெட்டை குறைத்தால் நினைத்த மாதிரி வராது என விக்னேஷ் சிவன் இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், உங்களை நம்பினால் வேலைக்கு ஆகாது என ஜம்ப்படித்து விட்டார்.

பிரதீப் ரங்கநாதனை மைத்திரி மூவி மேக்கர்ஸ் அடுத்த படத்திற்கு கமிட் செய்து வைத்திருந்தார்கள். சுதா கொங்காராவின் அசிஸ்டன்ட் டைரக்டர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். மம்தா பஜுலு இந்தப் படத்தின் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்பொழுது இந்த படத்தில் நடிப்பதற்காக ஜம் படித்து விட்டார் பிரதீப்.

Trending News