புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

டாப் கீரில் செல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ஜெட் வேகத்தில் உயர்த்திய சம்பளம்

ஒரே படம் தான் வேற லெவலில் மாறிவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இதனால் அடுத்தடுத்த படங்களில் ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு தற்போது லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி லாபம் பார்த்ததால், பிரதீப் ரங்கநாதனின் ரேஞ்ச் எங்கேயோ சென்று விட்டது. இதனால் தலைகால் புரியாமல் ஓவர் ஆட்டம் போடுகிறார். தற்போது பிரதீப் ரங்கநாதனின் வீட்டு வாசலில் முன்னணி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசை கட்டி நிற்கின்றனர்.

Also Read: ஹீரோவாக பிரதீப்பிற்கு குவியும் பட வாய்ப்பு.. சம்பளத்தை கேட்டு பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடிய தயாரிப்பாளர்

பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார். லவ் டுடே படத்தை ஏற்கனவே லைக்காவிடம் தான் முதலில் கூறினார். அதை அவர்கள் தயாரிக்க ஒத்துக் கொள்ளவில்லை. அதன்பின் ஏஜிஎஸ் அந்தப் படத்தை தயாரித்தது. இப்பொழுது மூன்று நான்கு படங்கள் நடிக்கவிருக்கிறார்.

இந்த படங்களுக்கு எல்லாம் பிரதீப் ரங்கநாதன் சம்பளத்தை 2 கோடிகள் வரை உயர்த்தி கேட்கிறாராம். மேலும் ஏகே 62 படம் கைநழுவியதால் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

இந்தப் படத்திற்கும் பிரதீப் 2 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். ஹீரோவாக மட்டுமல்ல இயக்குனராகவும் பிரதீப் ரங்கநாதனின் மவுசு கூடிவிட்டது. அதுவும் பிரதீப் விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார்.

ஆனால் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தில் நடிப்பதில் பிசியாக இருப்பதால், பிரதீப் படத்தில் நடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகிவிடும். அந்த இடைவெளியில் பிரதீப் ஹீரோவாக நடிக்க, அடுத்தடுத்த படங்களில் கதை கேட்டு கமிட் ஆகி கொண்டு இருக்கிறார். அதற்காக சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி பல கோடியை அள்ளும் திட்டத்தில் பிரதீப் உள்ளார்.

Also Read: நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

- Advertisement -

Trending News