Dragon Twitter Review: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக பட குழு தீவிரமான பிரமோஷனில் ஈடுபட்டு வந்தனர். அதுவே படத்திற்கான பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் எப்படி இருக்கு.?
அதேபோல் ட்ரெய்லர் டான் படத்தை நினைவு படுத்தியது. அதனால் அதன் பார்ட் 2 என்று கூட பேசப்பட்டது. இப்படி படத்திற்கு ஏகப்பட்ட அலப்பறை இருந்தது.

அந்த அளவுக்கு படம் இருந்ததா என்பதை ரசிகர்கள் இப்போது twitter தளத்தில் விமர்சனமாக பதிவிட்டு வருகின்றனர். அதில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு கதாபாத்திரம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதேபோல் இடைவேளை காட்சி எதிர்பாராத ட்விஸ்ட் சிறப்பாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் பாடல் காமெடி என அனைத்துமே படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. மிஷ்கின் வரும் அந்த காட்சி தான் தற்போது ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.
அனுபமாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றொரு நாயகி கயாடு ஆகியோர் தங்கள் கேரக்டரை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.
இப்படியாக படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது விரைவில் தெரியும்.