Dragon Trailer: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள டிராகன் படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது. லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன், கே எஸ் ரவிக்குமார், கௌதம் மேனன், சினேகா, மிஷ்கின், விஜே சித்து அண்ட் கோ என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் இருக்கின்றனர்.
ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே பேட் பாய்ஸ் தான் பிடிக்கும் என்ற வசனத்தோடு தொடங்குகிறது. அதை தொடர்ந்து கெட்ட பையனாக காலேஜில் அலப்பறை கொடுப்பவராக பிரதீப் இருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
48 அரியர், வீட்டில் பொய் சொல்லி காசு வாங்குவது, வேலைக்கு போகாமல் நண்பர்களிடம் காசு வாங்கி வீட்டில் கொடுப்பது என ரொம்பவும் கெட்ட பையனாக இருக்கிறார்.
இதற்கு இடையில் காதல், பிரேக் அப் என கலவையாக இருக்கிறது ட்ரெய்லர். அதேபோல் பாட்டு, டான்ஸ், காமெடி, சென்டிமென்ட் என ரகளையாகவும் இருக்கிறது.
இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் வைரலாகி வருகிறது. அதே போல் படம் நிச்சயம் வெற்றி தான் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.