Pradeep Ranganathan: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
தனுஷ இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையே இந்த படம் ஓவர் டேக் செய்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பல வருடங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜயை கிண்டல் பண்ணி போட்ட சமூக வலைதள பதிவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
டிராகனுக்கு வச்ச பெரிய ஆப்பு!
ஜில்லா பட ரிலீஸ் இன் போது விஜய் ரசிகர் ஒருவர் விஜய் இதுவரை பேசிய டப்பிங்கில் இது சிறந்த டப்பிங் என பாராட்டி இருக்கிறார்.
அந்த பதிவுக்கு பதில் அளித்த பிரதீப் இந்த படம் சுறா 2 மாதிரி இருக்குது, அது சரி உன்ன மாதிரி ஆளுங்களுக்கு இந்த படம் புடிக்க தான் செய்யும் என நக்கலாக பேசியிருக்கிறார்.
டிராகன் படம் வெற்றிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது விஜய் ரசிகர்களை சீண்டி விடும்படி இந்த பதிவு தற்போது வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே லவ் டுடே படத்தின் போதும் இவருடைய பழைய சமூக வலைதள பதிவுகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
