புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

சமீபத்தில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் லவ் டுடே படம் இப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது.

லவ் டுடே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை படக்குழுவே நம்பவில்லை. அதுமட்டுமின்றி ஓடிடியில் இப்படம் வெளியான பிறகும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பிரதீப் பெற்றுள்ளார்.

Also Read : நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

இதற்கு முன்னதாக இவர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக பிரதீப்பின் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் லவ் டுடே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தை பாலிவுட்டில் வேறொரு ஹீரோவை வைத்து பிரதீப் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் வெளியாகி உள்ளது.

Also Read : கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

ஆரம்பத்தில் லவ் டுடே படத்தில் இயக்குனராக மற்றும் நடிகராக ஒப்பந்தமான போது 70 லட்சம் பிரதீப்புக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதன் பின்பு படம் வெளியாகி நல்ல வசூல் பெற்ற நிலையில் தயாரிப்பாளர் கூடுதலாக 80 கோடி கொடுத்ததால் மொத்தமாக 1.50 கோடியை லவ் டுடே படத்திற்காக பிரதீப் பெற்றுள்ளார்.

இவ்வாறு 100 கோடி வசூலை அள்ளி கொடுத்த லவ் டுடே படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரதீப்புக்கு தயாரிப்பாளர் கொஞ்சமாக கிள்ளி கொடுத்துள்ளார். ஆனால் லவ் டுடே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப்பின் மார்க்கெட் எகிற உள்ளது. அடுத்தடுத்த படங்களில் டாப் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது.

Also Read : 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

- Advertisement -

Trending News