புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த விஷயத்தை அஜித்தை பார்த்து தான் கத்துக்கணும்.. KS ரவிக்குமார் புகழாரம்

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பை காட்டிலும் குணத்திற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தை பற்றி நல்ல விஷயங்களை பலர் கூறி நாம் கேட்டிருப்போம். அந்த வரிசையில் அஜித் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தற்போது ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அஜித் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் வரலாறு.

இப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் உள்ள அஜித் பெண்களுக்கு உண்டான நளினத்துடன் இருப்பார். இதனால் இப்படத்தில் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள தயங்குவார்கள். முதலில் இது போன்ற கதாபாத்திரத்தில் எந்த நடிகரும் நடிக்க சம்மதிக்கமாட்டார்கள்.

அஜித் இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்டார். இந்நிலையில் அந்த பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், அஜித் மனதில் பட்டதை முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். இது சரி என்றால் சரி அல்லது தவறு என்றால் உடனே கூறி விடுவாராம்.

மேலும் அஜித் வெளி உலகத்திற்கு தெரியாமல் பல உதவிகள் செய்து வருவதாக கேஎஸ் ரவிக்குமார் கூறியிருந்தார். கடின உழைப்பு என்றால் அது அஜித் தான். என்னைப் போன்றவர்களும் அஜித்திடம் இருந்து கடின உழைப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார். அதாவது வரலாறு படத்தின் ஷூட்டிங்குக்காக 15 நாள் கேஎஸ் ரவிக்குமார் அஜித்திடம் கால்ஷீட் கேட்டு உள்ளார்.

ஆனால் அஜித் எனக்கு ஒரு வாரம் மட்டும் தான் சார் டைம் இருக்கு அதுக்குள்ள எடுத்த முடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அது சவாலான ஒன்று 7 நாட்களில் படம் எடுக்க வேண்டுமென்றால் இரவும் பகலும் எடுக்க வேண்டும் என்ன ரவிக்குமார் கூற உடனே நான் பண்றேன் என அஜித் கூறியுள்ளார். அவ்வாறு அஜித் நினைத்தால் அதை முடித்தே தீரும் அளவுக்கு வலிமையான ஒருவர்.

Trending News