தமிழில் முதன்மை வில்லன் நடிகர்களில் ஒருவராய் திகழ்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 90-களில் வெளிவந்த ஆசை படத்தின் மேஜரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை அதே போல மதுரை முத்துப்பாண்டியையோ சென்னை மயில் வாகணனையே யாரும் அத்தனை எளிதில் மறந்திட முடியாது.
சில வருடங்களுக்கு ஒரு படம் என இருந்தவருக்கு இப்போது மீண்டும் பீக் வந்து விட்டது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிசியாக உள்ளார். தமிழில் மித்ரன் பட இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம் திருச்சிற்றம்பலம் இப்படத்தில் பாரதிராஜா பிரகாஷ் ராஜ் முக்கியமான ரோலில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு சென்ற பிரகாஷ் ராஜ் வழுக்கி விழுந்ததில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்திற்காக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தோள் பட்டையில் எழும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்கிற நிலைக்கு ஆனது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவரோடு திருச்சிற்றம்பலம் சூட்டிங் ஸ்பாட்டான கோவளத்திற்கு விரைந்தார் பிரகாஷ் ராஜ்.
அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டு என்னால் நின்ற படப்பிடிப்பை நானே முடிததுக்கொடுப்பது தான் சரி என்று கூறினார். டி அண்ட் ஏ என ரசிகர்களால் கூறப்படும் தனுஷ், அனிருத் மீண்டும் கூட்டணி வைக்கும் இப்படத்திற்கு கதையும் வசனமும் தனுஷ் தானாம். தனுஷின் 44 வது படமான திருச்சிற்றம்பலம் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருக்க சொல்கிறது ரசிகர்களை.