தமிழில் 90களில் ஓரளவு பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் கே.ராஜன். பல்வேறு முதண்மை நடிகர்கள வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எனறும் அடையளம் காணலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் நம்மிடையே அவர் தயாரிப்பாளர் சங்கம் குறித்து சுவாரஸ்யமாகவும் காட்டமாகவும் சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் வி.ஐ.பி படத்தின் வாயிலாக அறிமுகம் கண்டவர் நடிகை சிம்ரன் அப்போதைய காலங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் முன்ணணி நடிகர்களாக வலம் வந்த அனைவருடனும் கூட்டணி போட்டி முன்ணணி நடிகையாக வலம் வந்தவர்.
அதே போல தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் படத்தின் வாயிலாக அறிமுகம் கண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சிறந்த வில்லனாக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றால் மிகையாகாது.
அப்படியாக இருவரும் பீக்காக படு பிசியாக தமிழ் தெலுங்கு கன்னட சினிமாவில் வலம் வந்த தருணத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டு அதனை விட பெரிய ஆஃபர் வந்ததும் அடுத்த படத்திற்காக சென்று விடவே.
முதலில் நடிக்க கேட்டுக்கொண்ட சிறு தயாரிப்பாளர் இவர்கள் மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தாராம்.
அவர் கொடுத்த புகாரின் உடனடி நடவடிக்கையாக இருவருக்கும் தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
பிறகு பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இருவரிடமும் இருந்து 5லட்சங்கள் அபராதமாக வசூலிக்கப்பட்ட பிறகு தான் படம் நடிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இது போலவே தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் சில மாற்றஙகளை கொண்டு வரலாம் என்றும். இப்போது வரை நடிகர் சங்கத்திற்கு இருக்கும் பவர் இங்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இல்லை என்றும் குறிப்பிட்டார் கே.ராஜன்.