தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கில்லி படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மக்கள் பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். புதிதாக வெளியாகும் படங்களை செய்யாத வசூலை கில்லி படம் செய்து வருகிறது.
இந்த படத்தை பற்றிய சுவாரசியமான விஷயங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் நடித்த பிரபலங்களும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரகாஷ்ராஜ் கொடுத்த பேட்டி தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிரகாஷ்ராஜின் கேரியரில் கில்லி படம் திருப்புமுனையாக அமைந்தது. இதில் அவருடைய முத்துப்பாண்டி கதாபாத்திரத்திற்கு தியேட்டரில் கைதட்டல் பறந்தது. இந்த சூழலில் கில்லி படம் ரிலீஸ் ஆனவுடன் ஒருவர் இந்த படத்தில் நீங்கள் வில்லனா என பிரகாஷ்ராஜிடம் கேட்டாராம்.
கில்லி படத்தை பற்றி பேசிய பிரகாஷ்ராஜ்
இந்தப் படத்துல விஜய் தான் வில்லன் என்ற பிரகாஷ்ராஜ் சொன்னாராம். அதாவது தனலட்சுமியை நான்தான் லவ் பண்ணேன், அவன் வந்து கூட்டிட்டு போனான். தனலட்சுமி மேல ஒரு சின்ன கீறல் கூட விழ கூடாதுன்னு நான் நினைச்சேன்.
அவன் அந்த படத்துல தனலட்சுமி கழுத்துல கத்தியை வச்சான். கில்லி படம் நடிக்கும் போது நான் ஹீரோ, திரிஷா ஹீரோயின் விஜய் தான் வில்லன் என்று பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். 20 வருஷத்துக்கு பிறகு இப்படி ஒரு உருட்டா என விஜய் ரசிகர்கள் பிரகாஷ்ராஜை வறுத்து எடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் கில்லி படத்தின் ஹிட்டுக்கு பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய காரணம். மேலும் விஜய்யின் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஜயின் மற்ற படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய இப்போது திட்டமிட்டுள்ளனர்.