ஆரம்பமே அதிரச்செய்த பிரசாந்த் கிஷோர்.. TVK உடன் கூட்டணியா.?

Vijay: பிரசாந்த் கிஷோர் பற்றி தெரியாதவர்களை இருக்க முடியாது. குறிப்பாக அரசியல் ஆளுமைகளுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும். ஏனென்றால் பல நேரங்களில் இவருடைய கருத்துக்கணிப்பு சரியாக இருந்திருக்கிறது. தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என்ற இவரது வியூகம் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்க உள்ளதாக கூறிவந்த நிலையில் அண்மையில் ஜான் சூராஜ் என்ற கட்சியினை தொடங்கி இருக்கிறார். அதுவும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி தன் கட்சியை தொடங்கி சில விஷயங்களை பிரசாந்த் கிஷோர் பேசி இருந்தார்.

அதாவது பீகாரை சேர்ந்த மாணவர்களை டெல்லி, தமிழ்நாடு, மும்பை போன்ற இடங்களில் துஷ் பிரயோகத்திற்காக தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கேட்கும் வகையில் ஜெய் பீகார் என்று முழக்கமிடும் அளவுக்கு பீகார் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

TVK உடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணியா.?

அடுத்த 10 வருடத்திற்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்றால் 5 இலட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதனால் மதுவிலக்கு நீக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் தொகையை வேறு எதற்கும் பயன்படுத்தாமல் பீகார் மாணவர்களின் படிப்புக்காக முழுக்க முழுக்க செலவிட உள்ளதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

கல்வியினால் மட்டுமே தனது நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரசாந்த் கிஷோருடன் தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி போட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

அவருடைய கொள்கையும், பிரசாந்தியும் கொள்கையும் ஓரளவு ஒத்துப் போவதால் கல்விக்கு முக்கியத்துவம் தரும் இந்த கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இரு கட்சிகள் இணைந்தால் பெரிய மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது.

விஜய்க்கு கை கொடுக்குமா TVK

- Advertisement -spot_img

Trending News