தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்களும் ஆசைப்பட்ட நிலையில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அது கைநழுவி சென்றது சோகத்தை கொடுத்துள்ளது.
அஜித் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்பேர்ப்பட்ட அஜித்துடன் ஒரு படம் இயக்க கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என சமீபத்திய பேட்டியில் புலம்பி உள்ளார் இயக்குனர் பிரவீன் காந்தி.
அஜித்துக்காக பிரவீன் காந்தி பார்த்து பார்த்து எழுதிய கதைதான் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம். இந்த படத்தின் கதை முதன்முதலில் அஜித்துக்கு சொல்லப்பட்டு சூட்டிங் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் இந்த படம் கைவிடப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் பிரவீன் காந்தி பற்றி அவருடைய வட்டாரங்களில் உள்ள சிலர் அஜித்திடம் தவறாக சொல்ல, அஜித்தும் அதை உண்மை என நம்பி பிரவீன் காந்தியுடன் படம் பண்ண விருப்பம் இல்லை என ஒதுங்கிக் கொண்டாராம்.
பிரவீன் காந்திக்கு கொடுத்த கால்ஷீட்டில் தான் அவருடன் உதவி இயக்குனராக இருந்த ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து தீனா என்ற படத்தை எடுத்தார். தன்னுடைய துணை இயக்குனருக்கும் பட வாய்ப்பு கிடைக்கிறது என பிரவீன் காந்தியும் அமைதியாக இருந்துவிட்டாராம்.
அஜித் வேண்டாம் என்று சொன்ன பிறகு ஏன் என்ற காரணத்தை கூட கேட்காமல் தன்னுடைய அசிஸ்டன்ட் டைரக்டர் இயக்குனராகிறார் என்ற சந்தோசத்தில் விட்டுக் கொடுத்துவிட்டேன் எனவும் மனமுருகி குறிப்பிட்டுள்ளார்.