திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் முன்னணி நடிகையாக வளர முடியாது.. 40 வருடங்களாக குமுறும் பிரசாந்த் பட ஆன்ட்டி நடிகை

குழந்தை நட்சத்திரமாக 5 வயதில் தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகை ஒருவர், 40 வருடங்களாக சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்து ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களில் தமிழ் சினிமாவில் ஒயிலாட்டம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஷர்மிளா ராஜேஷ். அதன் பிறகு கிழக்கே வரும் பாட்டு படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

ஷர்மிளா நடிக்க வந்தததிலிருந்து இன்றுவரை யாரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டார். அப்படி செய்ய சொன்னால் அந்தப் பட வாய்ப்பே வேண்டாம் என்று தூக்கி எறிந்து விடுவாராம். ஆனால் இவர் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் முன்னணி நடிகையாக வளராமல் போனதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்யாததுதான் காரணம் என்று குமுறுகிறார்.

Also Read: யாருகிட்ட விளையாடுற, தொலைச்சிடுவேன்.. அஜித்துக்காக தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய மம்பட்டியான்

இப்படி சினிமாவில் கண்ணியமும் கட்டுப்பாடுமாய் இருந்த ஷர்மிளாவை நிஜ வாழ்க்கையில் காதல் என்கிற பெயரில் மூன்று பேர் சீரழித்திருக்கின்றனர். மலையாள நடிகை ஆன இவர் வில்லன் நடிகர் பாபு ஆண்டனி என்பவருடன் காதலில் விழுந்தார். அவருக்கு இவர் சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்ட பாபு ஆண்டனி கடைசியில் இவரை ஏமாற்றி சென்று விட்டார். அதன்பின் மலையாள சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றிய கிஷோர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் இவரது பணத்தை பிடுங்கிக் கொண்டு இவரை தூக்கி எறிந்து விட்டார்.

Also Read: பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி

பிறகு சினிமாவில் இல்லாத ராஜேஷ் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கை நன்றாக போனது. ஆனால் இவர்களுக்குள் மதரீதியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர் கிறிஸ்துவ பெண், அவர் ஒரு இந்து. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் சினிமாவில் முன்னேற முடியாமல் தவித்த இவருக்கு காதல் என்ற பெயரில் மூன்று பேர் செய்த சூழ்ச்சி இன்று ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் இருக்கும் அழகிற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்திருந்தால் மிகப்பெரிய நடிகையாக வந்திருப்பார் என சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.

Also Read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

Trending News