வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உச்ச நடிகரால் பிரசாந்த் படத்தை இயக்காமல் போன மோகன்ராஜா.. பக்காவாக பிளான் போட்ட தியாகராஜன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு விலகி சிறிது காலங்கள் இருந்தார். பிரசாந்த் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

பிரசாந்த் கடைசியாக சாகசம் என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் பிரசாந்த் ஹீரோவாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தைதான் தமிழில் அந்தகன் எனும் பெயரில் பிரசாந்த் நடித்து வருகிறார். முதலில் படத்தை இயக்குவதற்கு மோகன்ராஜ்விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு மோகன் ராஜாவும் சம்மதித்துள்ளார்.

chiranjeevi-mohan raja-cinemapettai
chiranjeevi-mohan raja-cinemapettai

ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு சிறிது காலதாமதமானது .அதற்குள் மோகன்ராஜா மலையாளத்தில் வெற்றியடைந்த லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி வைத்து ரீமிக்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். அதனால் அந்தகன் படத்தை இயக்க முடியாது என பிரசாந்த்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு பிரசாந்த் தனது தந்தையையே தியாகராஜன் இப்படத்தை இயக்குமாறு கூறி தற்போது படப்பிடிப்பு பாதி முடித்துள்ளனர். கூடிய விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளனர். தெலுங்கில் இயக்கும் மோகன் ராஜா இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து தமிழில் படத்தை இயக்குவார் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News