புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிரசாந்தை ஏமாற்றிய குடும்பத்தினர்.. விஷயம் தெரிந்தவுடன் விவாகரத்தான சம்பவம்

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் பிரசாந்த் ஆரம்ப காலத்தில் இவரது படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ரஜினிகாந்திற்கு முன்பே ஐஸ்வர்யாராயுடன் ஜோடியாக நடித்த ஒரே நடிகர் பிரசாந்த் மட்டும்தான் அந்த அளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரசாந்துக்கு அப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் சினிமாவில் வந்துள்ளன. உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் அனைவருமே கொஞ்சம் மெத்தனமாக தான் இருப்பார்கள். அப்படி தான் பிரசாந்த் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது நினைத்த நேரத்தில் படப்பிடிப்பு ரத்து செய்வது என தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுத்துள்ளார்.

பிரசாந்த் அவரது தந்தையான தியாகராஜன் இருவரும் இணைந்து கதையை கேட்டு அதில் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அப்படித்தான் ஒரு காலத்தில் பிரசாந்தின் கதைகள் அனைத்துமே தியாகராஜன் தான் கேட்டு வந்தார். பின்பு தன் தந்தை சொல்வதெல்லாம் கேட்டு சில கதைகளை மறுத்துள்ளார். மேலும் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் போனதற்கு தியாகராஜன் ஒரு காரணமாக இருந்துள்ளார்.

அதன் பிறகுதான் பிரசாந்தின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. பிரசாந்த் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பிரசாந்த் கிரகலட்சுமி என்பவரை வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த 6 மாதத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

அதாவது அவரது மனைவி ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அது தெரியாமலேயே பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனால் பிரசாந்த் விவாகரத்து பெறுவதாக கூறிய அறிவித்தார். பிரசாந்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்த சமயத்தில் இவர் விவாகரத்து பெற்றது பல ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் படங்களும் வெற்றி அடையவில்லை.

prasanth
prasanth

ஆனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இப்படம் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Trending News