வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தளபதிக்கு ரெண்டு கண்டிஷன் போட்ட பிரசாந்தின் அப்பா.. ஆரம்பமே இவ்வளவு அலப்பறை தேவையா சார்.!

Thalapathy 68 – Prashanth: சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக தளபதி விஜய்க்கு அடுத்த ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தை விட, தளபதி 68 படத்தை பற்றி தான் அதிகமாக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் எந்த விதத்திலும் லியோ மீதான எதிர்பார்ப்பை குறைத்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு, இது பயங்கர அப்செட் ஆன விஷயமாக மாறி இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பிரியங்கா அருள் மோகனும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், 90ஸ் கிட்சுகளின் பேவரைட் ஹீரோவாக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Also Read:மனக்கசப்பை மறந்து அப்பாவை பார்க்க போன விஜய்.. சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

பிரசாந்தின் மார்க்கெட் இப்போது தரைதட்டி கொண்டு இருப்பதால் விஜய்யின் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்புகளே இல்லாத நிலையில் கிடைத்ததை உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல் கொஞ்சம் ஓவர் அல்டப் காட்டி வருகிறார்கள் பிரசாந்தும் அவருடைய அப்பா தியாகராஜனும்.

ஏற்கனவே பிரசாந்தின் மொத்த கேரியருக்கும் ஆப்பு வைத்தது அவருடைய அப்பா தியாகராஜன் தான் என்பது சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அவருடைய அப்பாவின் பேச்சை கேட்காமல் உபயோகப்படுத்தி இருந்தால் செகண்ட் இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றியை பார்த்திருப்பார்.

Also Read:லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

இப்போது தளபதி 68 வாய்ப்பையும் மொத்தமாய் சோலி முடிக்க முடிவு பண்ணி விட்டார் தியாகராஜன். பிரசாந்த் இதில் நடிப்பதற்கு நிபந்தனைக்கு மேல் நிபந்தனை போட்டுக் கொண்டிருக்கிறாராம் . அதாவது பிரசாந்த் நடிக்கும் காட்சிகள் எதையுமே நீக்க கூடாது என்றும், அவர் 30 நாள் கால் சீட் கொடுத்து நடித்தால் அது முழுக்க என்ன காட்சிகள் படமாக்கப்பட்டதோ அவை அப்படியே படத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம்.

தியாகராஜனுக்கு இதில் இன்னொரு வியாபார நானும் இருக்கிறது அதாவது பிரசாந்த் தளபதி 68ல் நடித்து விட்டால், அதை வைத்து அந்தகன் படத்திற்கு ப்ரமோஷன் செய்து விட வேண்டும் என்பது தான் அவருடைய திட்டம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உண்மை தான் என்றாலும், பிரசாந்த் கொஞ்சம் எல்லை மீறி தான் போகிறார்.

Also Read:ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

Trending News