பிரசாந்த் வெற்றிக்கு காரணம் வடிவேலு.. இது என்ன புது புரளியா இருக்கு

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாளராக இருந்தவர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மேலும் அப்போது பிரசாந்துக்கு இருந்த சினிமாவின் மார்க்கெட் அவரைப் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால் பிரசாந்தின் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் காரணமாக சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாமல் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் காரணமாகவே அவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

மேலும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு பிரசாந்த் மேல் இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் குறைய தொடங்கியது. அதனால் தயாரிப்பாளர்கள் பலரும் பிரசாந்த் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. அதுமட்டுமில்லாமல் பிரசாந்த்க்கும் சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் குறைந்தது முக்கிய காரணமாக அப்போது பார்க்கப்பட்டது.

பின்பு பிரசாந்த் தனது சக நடிகர்களின் விழாக்களில் கலந்து கொள்வது. மேலும் சினிமாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது. ஒரு சில பேட்டிகள் கொடுப்பது என சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டினார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் பிரசாந்த் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்காக ஓடவில்லை எல்லாம் வடிவேலு காமெடிக்காக மட்டுமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதாவது ஆயுதம், வின்னர் மற்றும் லண்டன் போன்ற படங்கள் வடிவேலின் காமெடிக்காக மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தற்போது பிரசாந்துக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துள்ளதால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்தாதுன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.