திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கம்மி பட்ஜெட்டில் பெரும் லாபம் பார்த்த பிரசாந்த்தின் 2 படங்கள்.. வேஸ்ட்டுனு நினைத்தவர்களுக்கு மூஞ்சியில் பூசிய கரி 

Actor Prashanth: 90களில் இரண்டே படங்களால் தமிழ் திரைஉலகத்தை உற்றுப் பார்க்க வைத்தவர் நடிகர் தான் பிரசாந்த் . இவர் என்னதான் டாப் இயக்குனரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் தான் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தார். தற்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜய்க்கு எல்லாம் ஒரு காலத்தில் பயங்கர டஃப் கொடுத்தவர் பிரசாந்த்.

பிரசாந்த் பீக்கில் இருந்த காலத்தில் அவர் படத்துடன் எந்த படமும் ரிலீஸ் ஆகாது. ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க இவர் பெரிதும்  போராடினார். பிரபுதேவா வரவுக்கு முன்னரே இவர் தான் தமிழ் சினிமாவின் பெஸ்ட் டான்சர். இப்போது விஜய் எப்படி தன்னுடைய படங்களில் இருக்கும்  பாடல்களில் எல்லாம் டான்சில் பிச்சு உதறுகிறாரோ, அதே போல் தான் பிரசாந்தும் தன்னுடைய படங்களில் இருக்கும் பாடல்களில் சிறப்பாக நடனமாடுவார்.

Also Read: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்துக்கு எடுபடல.. சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட கொடுமை

மேலும் பிரசாந்த் நடித்த இரண்டு  படங்கள் கம்மி பட்ஜெட்டில் எடுத்து பெரும் லாபத்தை பெற்று தந்தது. வைகாசி பொறந்தாச்சு மற்றும் செம்பருத்தி இந்த இரண்டு படங்களும் பிரசாந்தை தூக்கி நிறுத்திய படங்கள். 90களில் வெளியான இந்த படங்களில் பிரசாந்த் ஹண்ட்ஸம் லுக்கில் ரசிகர்களுக்கு சாக்லேட் பாயாக தெரிந்தார்.

அதிலும் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் பிரசாந்த் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல ஹிட் கொடுத்த படமாக இருந்ததால் ஹிந்தியில் ‘ஐ லவ் யூ’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்து ரிலீஸ் ஆகி அங்கேயும் வசூலில் பட்டயக் கிளப்பியது.

Also Read: சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

ஆனால் அறிமுக நாயகனாக முதலில் பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு மற்றும் செம்பருத்தி போன்ற இரண்டு படங்களையும் தயாரிப்பாளர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் வேஸ்ட் என்று தன்னை நினைத்தவர்களின் முகத்தில் கரியை பூசும் அளவுக்கு பிரசாந்த் இந்த படத்தில் சிறப்பாக நடித்து ஹிட் கொடுத்தார்.

இந்த படத்தின் தொடர்ச்சியாக பிரசாந்த் வரிசையாக ஜீன்ஸ், ஜோடி, வின்னர் என தொடர்ந்து வெற்றி படங்களை  கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு வந்த கெட்ட நேரத்தால், அதன் பிறகு நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அவரைக் கண்டு அஞ்சிய டாப் ஹீரோக்கள் எல்லாம் இப்போது அவரை மிஞ்சி வளர்ந்து நிற்கின்றனர். இருப்பினும் பிரசாந்த் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து தன்னுடைய முயற்சியை செய்து கொண்டிருக்கிறார். 

Also Read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

Trending News