சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கேப்டனை புதைச்ச இடத்துல ஈரம் கூட காயல.! பக்கா அரசியல்வாதியாக மாறிய பிரேமலதா

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உயிர்நீத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய இழப்பை இப்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு தமிழகமே அவருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவருடைய மனைவி விஜயகாந்தை நல்லடக்கம் செய்த உடனேயே மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்போது பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது நேற்று கேப்டனை அரசு மரியாதையோடு சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்தனர்.

அதை தொடர்ந்து பிரேமலதா இறுதி அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை பெற்று கேப்டனுக்கு சமர்பிக்க வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.

Also read: கேப்டன் திரையில் மறைந்து அழ வைத்த 5 படங்கள்.. தூக்குமேடையை புன்னகையோடு ஏற்று கொண்ட ரமணா

மேலும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கேப்டனை இழந்து நாம் துக்கத்தில் இருக்கிறோம். இருந்தாலும் தேர்தலில் நாம் பெறும் வெற்றி தான் தேமுதிக கட்சியின் வெற்றி நாள் என்பதை இந்த நல்ல நாளில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கேப்டனை புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை அதற்குள் இப்படி தேர்தல் பிரச்சாரம் செய்கிறீர்களே? அப்படின்னா எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருந்தீங்களா அண்ணியாரே? என ரசிகர்கள் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அவருடைய அதிகார வெறியை பற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில் இந்த பேச்சும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

Also read: கேப்டன் உடன் நடிக்க மறுத்த 5 நடிகைகள்.. திரைக்குப் பின்னால் நடந்த மிகப்பெரிய அரசியல்

Trending News