ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Vijayakanth: கேப்டன் இல்லனா கோட் கதையே இல்ல.. அப்படி என்ன தான் செஞ்சிருப்பாரு VP, உணர்ச்சிவசப்பட்ட பிரேமலதா

Vijayakanth: தளபதி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படம் உருவாகி வருகிறது. ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் ஸ்பெஷலான ஐந்து கேமியோ ரோல்களும் உள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயன், திரிஷா, முக்கிய கிரிக்கெட் பிரபலம் ஆகியவர்களோடு வெங்கட் பிரபுவும் ஒரு சீனில் காட்சியளிக்கிறாராம். இது தவிர விஜயகாந்தின் சிறப்பு தோற்றமும் இருக்கிறது.

இது குறித்து ஏற்கனவே அவருடைய மனைவி பிரேமலதா பேசியிருந்தார். அதன்படி ஏஐ முறையில் கேப்டனின் காட்சிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவருடைய காட்சிகள் வருமாம். அதுவும் கிளைமாக்ஸுக்கு முன்பான முக்கிய காட்சிகளில் அவர் தோன்ற இருக்கிறார்.

கோட் படத்தில் கேப்டன்

அந்தக் காட்சியும் கேரக்டரும் படத்துக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என செய்திகள் கசிந்துள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் கேப்டன் இல்லனா கோட் கதையே இல்லை என்னும் அளவுக்கு இருக்குமாம்.

அந்த காட்சிகளை வெங்கட் பிரபு தற்போது பிரேமலதாவிடம் காட்டி இருக்கிறார். அவர் அதை பார்த்து அசந்து போய் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார். அந்த அளவுக்கு கேப்டன் ஒரிஜினலாக நடித்தது போல் அந்த காட்சி இருந்ததாம்.

அந்த வகையில் படம் வெளிவந்த பிறகு அது மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இதற்காகவே ரசிகர்கள் கோட் பட ரிலீஸை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Trending News