80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜயகாந்த், அதன்பிறகு அரசியலிலும் பிரவேசம் செய்ய தொடங்கிவிட்டார். இவர் இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர். குறிப்பாக இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் என்ற படம் விஜயகாந்தின் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை தந்தது.
அதன் பிறகு விஜயகாந்த் அவருக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழியுடன் கேப்டன் விஜயகாந்த் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. சினிமாவில் இந்த அளவிற்கு உயர அவருடைய நெருங்கிய நண்பரும் மேனேஜருமான இப்ராஹிம் ராவுத்தர் என்பவரும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் திரை உலகில் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் ஏதாவது ஒரு படம் பிளாப் ஆனால், அதை இப்ராஹிம் ராவுத்தர் முதல் ஆளாக முன்வந்து தோள்கொடுப்பது மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த செலவிலேயே விஜயகாந்துக்கு மற்றொரு வெற்றிப் படத்தை உருவாக்கி வெளியிடுவாராம்.
இதற்காக ராவுத்தர் காசு பணத்தை பார்க்காமல் விஜயகாந்தின் வெற்றிக்காகவே அவருடன் கூடவே இருந்தாராம். இதனால்தான் இப்ராஹிம் ராவுத்தர் இல்லையென்றால் விஜயகாந்த் இல்லை என்று அந்தக் காலத்தில் திரைப்பிரபலங்கள் கூறுவதும் உண்டு.
இவ்வாறு இருக்க விஜயகாந்துக்கு திருமணம் ஆனபிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வரவு செலவு கணக்கை கறாராக கேட்க தொடங்கிவிட்டார். இதனால் மேனேஜர் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் ராவுத்தருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலை வந்துவிட்டதாம்.
ஒருவேளை இப்ராஹிம் ராவுத்தர் கடைசிவரை விஜயகாந்துடன் இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல விஜயகாந்தும் இன்று வரை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.