திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயலலிதா, விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வேண்டாம்.. அஜித்துக்காக பிரேமம் இயக்குனர் போட்ட அதிர்ச்சி பதிவு

Vijayakanth-Ajith: சினிமாவிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜயகாந்த் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அஜித் குறித்து பிரேமம் இயக்குனர் போட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் அஜித் சார், நிவின் பாலியும், சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர போவதாக சொன்னார்கள். அதாவது நீங்கள் உங்கள் மகள் பிரேமம் படத்தை பார்த்து வியந்ததை கண்டு நிவின் பாலியை உங்கள் வீட்டுக்கு அழைத்தீர்கள். அப்போது பேசிக் கொண்டிருந்த போது இந்த விஷயத்தை கூறியிருக்கிறீர்கள்.

ஆனால் இதுவரை நீங்கள் அரசியலுக்கு வரவில்லை. ஒரு வேலை நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? அல்லது உங்களுக்கு எதிராக யாரேனும் சதி செய்கிறார்களா? இல்லை அவர்கள் என்னிடம் பொய் சொன்னார்களா? என மூன்று கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் இதற்கு நீங்கள் விளக்கம் தர வேண்டும்.

Also read: கண்ணீர் வெள்ளத்தில் தமிழகம், ஸ்தம்பித்த கோயம்பேடு.. மதுரை மைந்தன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவை கொன்றது போல் விஜயகாந்தையும் கொன்றுவிட்டார்கள். நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. அதேபோல் விஜயகாந்த்தின் வீழ்ச்சிக்கு காரணம் அவரைச் சுற்றி இருப்பவர்கள் தான் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இவர்கள் நிலை உங்களுக்கு வர வேண்டாம் என அஜித்துக்கு சொல்லாமல் சொல்லி இருப்பது போல் தெரிகிறது.

alphonse-puthiran
alphonse-puthiran

இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சரக்கு அடித்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது என அவர் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறீர்களா? எனவும் சில ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: நாக்கை துருத்தி, வேட்டியை மடித்து கட்டி, இரும்பு ராடுடன் வந்த கேப்டன்.. பின்னங்கால் பிடரியில் பட ஓடிய வாட்டாள்

Trending News