சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

புத்தாண்டில் திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி.. பொண்ணு யாரு தெரியுமா?.

Premji marriage announcement: 44 வயதாகும் பிரேம்ஜி கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது புத்தாண்டை முன்னிட்டு நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘ஹேப்பி நியூ இயர். இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் மற்ற இயக்குனர்களின் படங்களை விட தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா, சரோஜா, பிரியாணி, மங்காத்தா, மாஸ் என்கின்ற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து காமெடியில் கலக்கியவர். அதுமட்டுமல்ல இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரேம்ஜிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தளபதியுடன் இணைந்து நடித்த ராசி இப்போது பிரேம்ஜியை புது மாப்பிள்ளை ஆக்கிவிட்டது. இந்த வருடம் கட்டாயம் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார், பொண்ணும் ரெடியாக இருக்கிறதாம்.

Also Read: விஜய்யை பத்தி பேசாதீங்க..! விஜயகாந்த் இறப்பிற்கு பின் கொந்தளித்த பிரபலம்

கல்யாண அப்டேட் கொடுத்த நடிகர் பிரேம்ஜி

ஆனால் யார் என்பதை சீக்ரடாக வைத்திருக்கிறார். காதல் திருமணத்தை தான் அரேஞ்ச் மேரேஜ் ஆகிறது. விஜய்யுடன் தளபதி 68 படத்தில் நடிக்கும் போது, அவர் கொடுத்த அட்வைஸ் தான் இப்போது முத்தின கத்திரிக்காவாக இருந்த பிரேம்ஜி திடீர் திருமணம் செய்து கொள்ள காரணம்.

சமீபத்தில் பிரேம்ஜி பாடகி வினைதா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஒருவேளை லவ் மேரேஜ் என சொல்கிறார்கள் என்றால், இவர்கள் இருவருக்கும் தான் திருமணமா! என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமான டிஸ்கஷனில் இருக்கின்றனர்.

Also Read: விஜய் 68 இல் நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்ட விஜய்.. வசமாக சிக்கி கொண்ட வெங்கட் பிரபு

Trending News