மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்த அமலாபால் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு மிக வேகத்தில் வளர்ந்து வந்தார்.
கதையின் நாயகியாக தொடங்கியவர் கமர்சியல் நாயகியாக வலம் வரத்தொடங்கினார். திடீரென தெய்வத்திருமகள் படத்தில் பணியாற்றும் போது இயக்குநர் விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு பின்னர் அடுத்த சில வருடங்களிலேயே பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு அமலா பாலின் நடவடிக்கைகள் சுத்தமாக சரியில்லை என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வெகு வேகமாக பரவியது. அதற்கு தகுந்தாற்போல் பொது இடங்களுக்கும் மோசமான உடைகளில் வலம் வரத்தொடங்கினார்.
மேலும் படங்களிலும் அதைப் பின்பற்றினர். அதுவும் ஆடை என்ற படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தயாரித்த வெப்சீரிஸ் ஒன்றில் படுமோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி சமீபகாலமாக அமலாபால் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக சமீபத்தில் ஒரு பேட்டியில் வந்தபோது படுமோசமான உடையணிந்து வந்திருந்தார்.

அந்த புகைப்படம் திடீரென இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவ ஆரம்பித்தது. அதைப் பார்த்த பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி ஜொள்ளுவிடுமாறு கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் இரட்டை அர்த்தங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
