புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குக் வித் கோமாளி பிரபலத்துடன் பிரேம்ஜிக்கு திருமணமா? எல்லை மீறி போறீங்க!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. வயது 42 ஆகியும் இன்னமும் திருமணம் செய்யாமல் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரபரப்பானது.

பிரேம்ஜி இசையமைப்பாளராக பெரிய ஆளாக வேண்டும் என்று இருந்தாலும் அவ்வப்போது ஹீரோவாகவும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றார். காமெடி நடிகராக ஏற்றுக் கொண்ட மக்களை ஹீரோவாக கேட்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரேம்ஜி. இசையமைப்பிலும் சும்மா சொல்லக்கூடாது. நல்ல நல்ல பாடல்களை கொடுத்து வருகிறார்.

அமேசான் தளத்தில் மறைந்த முன்னாள் காமெடி நடிகர் விவேக்குடன் பிரேம்ஜி இணைந்து பணியாற்றிய LOL எங்க சிரி பார்ப்போம் என்ற ரியாலிட்டி ஷோவில் நடித்துள்ளனர். இதில் பிரேம்ஜியுடன் காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி புகழ், ஆர்த்தி, விக்னேஷ் காந்த், மாயா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் பிரேம்ஜிக்கு எப்போது திருமணமாகும் என தொகுப்பாளர் கேட்க, உடனடியாக நடிகை ஆர்த்தி விரைவில் குக் வித் கோமாளி புகழுடன் ஆக வாய்ப்பு இருக்கிறது என கிண்டலடித்தார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரேம்ஜி மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகிய இருவரையும் வைத்து மீம்ஸ் உருவாக்கி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

pugazh-cinemapettai
pugazh-cinemapettai

Trending News