புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கீரியும், பாம்புமாய் சண்டை போடும் ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர்.. பார்க்கிங் எப்படி இருக்கு? ரிவ்யூ ஷோ விமர்சனம்

Parking Preview Show: சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் பார்க்கிங். அதிலும் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எம்.எஸ். பாஸ்கர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடிகை இந்துஜா நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் பார்க்கிங் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞன் கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் புதிய காரை வாங்குகிறார்.

ஆனால் நிறுத்த இடம் இல்லாமல் ஹவுஸ் ஓனர் ஆன எம் எஸ் பாஸ்கர் உடன் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரை ஹரிஷ் கல்யாண் செல்கிறார். கடைசியில் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்ததா என்பது தான் பார்க்கிங் படத்தின் கதை. இன்று பிரிவியூ ஷோ வெளியாகி உள்ள நிலையில் சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Also Read : எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

அந்த வகையில் இந்துஜா மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் மலையாள படத்தை பார்த்த அனுபவம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பார்க்கிங் படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்து உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக படத்தை பாருங்கள் என்று ஒரு ரசிகர் பதிவிட்டிருக்கிறார்.

parking-preview
parking-preview

பூனை மற்றும் எலிக்கு இடையே நடக்கும் பிரச்சனை போல பார்க்கிங்கில் ஏற்படும் பிரச்சனையை அழகாக கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஹரிஷ் கல்யாண் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைக்கும் என்றும் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

parking-review
parking-review

மேலும் பிரிவூயூ ஷோவில் பார்க்கிங் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் திரையரங்குகளில் மக்கள் பார்த்தால் தான் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு தெரியவரும். அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இப்போது பார்க்கிங் படக்குழு படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்கள்.

Also Read : எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

Trending News